Saturday, July 7, 2018

பசும்பொன் தேவர் திருமகனார் வழியில் ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுக்கும் -- பசும்பொன் தேசிய கழகம் ( நிறுவனர் ) தலைவர் ஜோதி முத்துராமலிங்க தேவர்

பசும்பொன் தேவர் திருமகனார் வழியில் ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுக்கும் --
பசும்பொன் தேசிய கழகம் ( நிறுவனர் )
தலைவர்
ஜோதி முத்துராமலிங்க தேவர்
எனது தாத்தா வெள்ளைச்சாமி தேவர் ,எனது பாட்டி மீனலோசனி அம்மாளுக்கும் தேவர் திருமகனாரின் தாயார் இந்திராணி அம்மையார் அவர்களுக்கும் உடன் பிறந்தவர்கள் .இதுதான் எங்களுக்கும் தேவர் திருமகனாருக்கும் இடையிலான உறவு பசும்பொன் தேவர் திருமகனாரின் மறைவுக்கு பிறகு புளிச்சிக்குளம் கிராமத்தில் கிட்டத்தட்ட 1200 முதல் 2000 ஏக்கர் வரை தேவரின் சொத்துக்கள் பண்ணை வீடு நிறைந்த தனிக்கிராமம்.1946 -ஆம் ஆண்டில் விமான விபத்தில் நேதாஜி இறந்ததாக கூறப்பட்ட நேரத்தில் இதே புளிச்சிக்குளம் கிராமத்தில் உள்ள தேவருக்கு சொந்தமான வீட்டில் நேதாஜி தங்கியிருந்தார் .
தேவர் திருமகனாரின் மறைவுக்கு பிறகு அன்னசத்திரமாக திகழ்ந்த தேவரது எஸ்ட்டேட்டை குறிப்பிட்ட சில சாதியினர் ஆக்கிரமிப்பு தொடங்கிட அதனை முறியடித்து தேவரின் சொத்துக்களை குலதெய்வத்தின் சொத்துக்களைப்போல தலைமுறையாக பாதுகாத்து வருகிறோம் .எனது தம்பி வெள்ளைசாமித்தேவர் சட்டக்கல்லூரியில் படிக்கும் போது மாணவர் இயக்கமாக தோன்றி பின்னாளில் மக்கள் இயக்கமாக வளர்க்க பெற்று பசும்பொன் தேசிய கழகம்என்ற ஆலவிழுதாக தற்போது வாழ்ந்து நிற்கிறது .
குண்டர் சட்டங்கள் ,நீதிமன்ற வழக்குகள் இவையெல்லாம் தாண்டி களப்பணியே செம்மையாக கோவில்பட்டி ,தூத்துக்குடி பகுதிகளில்
எனது சகோதரர் மேற்கொண்ட போது எனது சகோதரரனின் வெள்ளைசாமித்தேவரின் பேச்சு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு பிடித்துவிட அவரை சந்தித்த பிறகு தொடந்து அன்று முதல் இன்று வரை அதிமுக ஆதரவு என்ற நிலைப்பாட்டை பசும்பொன் தேசிய கழகமும் அதே நிலைப்பாட்டை எடுத்து வருகிறது .
அதனை நினைவில் கொண்டுதான் 2011 நவம்பர் மாதம் எனது சகோதரர் மறைவுக்கு பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களை சந்தித்த போது ஒரு வீரமிக்க சகோதரரை இழந்து விட்டேன் என வருத்தத்துடன் குறிப்பிட்டார் .எங்களது அமைப்பு காசு ,பணம் ,கொடுத்து கூட்டம் சேர்க்கின்ற நோக்கத்தில் ஈடுபாடு இல்லாததோடு பதவியே விட சமுதாயமே முக்கியம் என்ற நோக்கத்தோடு செயல்படும் அமைப்பாகும் .பசும்பொன் தேவர் திருமகனார் வழியில் ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுப்பதே பசும்பொன் தேசிய கழகத்தின் முக்கிய நோக்கமாகும் .
கள்ளர்முரசு சுரேஷ்

No comments:

Post a Comment