தஞ்சை கோவிலில் இருந்து கடத்தப்பட்ட ராஜராஜசோழதேவர் சிலை 60 ஆண்டுகள் கழித்து மீட்கப்பட்டது எப்படி ?
தஞ்சை பெரிய கோவிலில் இருந்து களவாடப்பட்ட 150 கோடி ரூபாய் மதிப்புடைய மாமன்னர் ராஜராஜசோழதேவன் மற்றும் உலகமாதேவி சிலைகளை, மீட்டு சரித்திர சாதனை படைத்துள்ளார் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல். 60 வருடங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட சிலைகள் தமிழகம் திரும்பிய பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
தஞ்சை பெரிய கோவிலில் இருந்து களவாடப்பட்ட 150 கோடி ரூபாய் மதிப்புடைய மாமன்னர் ராஜராஜசோழதேவன் மற்றும் உலகமாதேவி சிலைகளை, மீட்டு சரித்திர சாதனை படைத்துள்ளார் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல். 60 வருடங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட சிலைகள் தமிழகம் திரும்பிய பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
தஞ்சைப் பெரியகோயிலில் வைக்கப்பட்டிருந்த பலநூறு ஆண்டுகள் பழைமையான மாமன்னன் ராஜராஜ சோழன்தேவர் - உலகமாதேவியின் உலோகச் சிலைகள், 60 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போனதாக கூறப்பட்டது. இந்தச் சிலைகள், குஜராத்தில் உள்ள சாராபாய் அருங்காட்சியகத்தில் இருப்பதாக ஒரு தகவல் வெளியான நிலையில் அவற்றை மீட்க பலர் முயற்சி மேற்கொண்ட போதும் அது வீண்முயற்சியாகவே முடிந்து போனது.
இந்நிலையில் பழங்கால பொக்கிஷமான இந்தச் சிலைகள் களவு போனது குறித்து ஐ.ஜி.,பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் புகார்கள் அளிக்கப்பட்டது.
இந்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருக்கின்ற ஒரு சரித்திர புகழ்வாந்த கோவிலில் இருந்து மதிப்பு மிக்க சிலைகள் களவாடப்பட்டது குறித்து விசாரணையை முன்னெடுத்தனர் ஐ.ஜி பொன்மாணிக்க வேல் தலைமையில் செயல்பட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ராஜாராமன், அசோக் நடராஜன், ஆய்வாளர்கள் ரவி, விநாயகமூர்த்தி, சுரேஷ்குமார், சிபின்ராஜமோகன், காவலர்கள் செழியன், சாமியப்பன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார்..!
அந்த சிலைகளை நேரில் பார்த்திருக்கும் நபர்களை தேடிப்பிடித்து சந்தித்தனர். அவர்கள் அளித்த கூடுதல் ஆதாரத்தின் வாயிலாக அந்த சிலை குறித்த தகவல்களை பெற்றனர். அந்த சிலைகள் இரண்டும் 1900 ஆம் ஆண்டு வரை கோவிலில் இருந்ததை வரலாற்று நூல்கள் உறுதிப்படுத்திய நிலையில் அது எப்போது மாயமானது என்பதையும் கண்டறிந்தது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு..!
தஞ்சாவூர் கபிஸ்தலம் அருகே உள்ள சறுக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ் பகதூர் சீனிவாச கோபாலாச்சாரியார் என்பவர் இந்த இரு சிலைகளையும் சாராபாய் அருங்காட்சியகத்திடம் பல கோடி ரூபாய்க்கு விற்றதை கண்டு பிடித்த அதிகாரிகள் குஜராத் கௌதம் சாராபாய் காலிகோ அருங்காட்சியகத்தில் விசாரணையை தொடங்கினர்.
அங்குள்ள சிலைகள் இரண்டும் தஞ்சை பெரிய கோவிலுக்கு சொந்தமானது என்பதை தகுந்த ஆதாரங்களோடு சுட்டிக்காட்டிய அதிகாரிகள், அது திருடி கடத்தப்பட்டவை என்பதையும் தெரிவித்தனர்.
ராஜராஜ சோழதேவர் சிலை 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலை மதிப்புகொண்டது. இதன் உயரம், இரண்டரை அடி. உலகமாதேவி சிலை 50 கோடி ரூபாய்க்கும் மேல் விலை மதிப்புகொண்டது என்கிறார்கள் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார்.
திருட்டு பொருளை வைத்திருப்பது குற்றம், அதுவும் பழமையான தொண்மையான அரசுக்கு சொந்தமான பொருட்களை திருடி வைத்திருப்பது கொலையை விட கடுமையான குற்றம் என்பதையும் சிலை கடத்தல் தடுப்பு அதிகாரிகள் சுட்டிக்காட்டியதால், கைது நடவடிக்கைக்கு பயந்து பல ஆண்டுகளாக தங்களது அருங்காட்சியகத்தில் வைத்திருந்த மாமன்னர் ராஜராஜதேவர், அவரது மனைவி உலகமாதேவி ஆகியோரது சிலைகளை காவல் துறையினரிடம் ஒப்படைக்கவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவும் கவுதம் சாராபாய் அருங்காட்சியக நிர்வாகத்தினர் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து தஞ்சையில் கோட்டை கட்டி, கடற்படை நிறுவி வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த மாமன்னர் ராஜராஜசோழதேவன் சிலையும், உலகமாதேவியின் சிலையும் மீட்கப்பட்டது.
No comments:
Post a Comment