Saturday, July 7, 2018

சைக்கிளிலேயே பசும்பொன் வரை சென்று தேவர் திருமகனாரை தரிசித்த தலை முறை தேவர் பேட்டையில் திறம்பட நடக்கும் தேவர் ஜெயந்தி விழா

சைக்கிளிலேயே பசும்பொன் வரை சென்று தேவர் திருமகனாரை தரிசித்த தலை முறை தேவர் பேட்டையில் திறம்பட நடக்கும் தேவர் ஜெயந்தி விழா
மக்களால் கொண்டாப்பப்படுகின்ற விழாக்கள் தான் வரலாற்றில் நிலைத்து நிற்கும் .அத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க பசும்பொன் தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழாவை மதுரையில் தேவர் பக்த்தர்கள் தேவர் திருமகனாருக்கு தங்களால் இயன்ற முறையில் சிலை வைத்து சீரும் சிறப்புமாக கொண்டாடி வருகின்றனர் .தேவர் ஜெயந்தி விழா குறித்து அந்த பகுதியே சேர்ந்த ராமலிங்கம் ,ஆனந்த் கஜேந்திரன் ,முருகன் உள்ளிட்டோரிடம் நாம் கேட்ட போது அவர்கள் கூறிய தகவல்கள் நம்மை வியக்க வைக்கின்றன .
முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கந்தசாமித்தேவர் அவர்களின் பெரு முயற்சியால் கப்பலூர் சிப்காட் பகுதியில் இருந்த தேவர் சிலை கிரைத்துறை மாகாளிப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு தேவர் சிலை இங்கே வைக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் நாங்கள் வணங்கி வருகிறோம் .
தேவர் ஜெயந்தி விழா நாளினை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசியல் தலைவர்கள் வந்து தேவர் அவர்களை வணங்கி விட்டு செல்வார்கள் .
முன்னாளில் திருநகரில் தேவர் திருமகனார் இருந்த போது பள்ளியில் படித்த காலங்களிலேயே டாக்டர் பாக்கியநாதன் செளந்திர பாண்டியன் ,அருப்புக்கோடடை இராமுத்தேவர் போன்றவர்களின் மூலமாக உணர்வோடு இப்பணிகளில் ஈடுபட்டொம்.தேவர் ஜெயந்தி நாளன்று பெண்கள் பொங்கல் வைத்தும்,பெருந்திரளான தேவர் பக்தர்களோடு தேவர் பாடல்களை ஒலிக்கவிட்டு தேவர் ஜெயந்தி விழாவை சிறப்பாக கொண்டாடுவதாக தெரிவித்து அவர்களுக்கு மத்தியில் டிங்கர் எஸ் .பாண்டி என்பவர் அக்கால தலைமுறைகளோடு மதுரையிலிருந்து சைக்கிளிலேயே பசும்பொன் வரை சென்று வந்த வியக்கத்தக்க தகவலை கூறினார் .
கள்ளர்முரசு சுரேஷ்

No comments:

Post a Comment