Saturday, July 7, 2018

நேதாஜி I N A படையில் பெண் போராளி சரஸ்வதி ராஜாமணி அம்மையார்

நேதாஜி I N A படையில் பெண் போராளி சரஸ்வதி ராஜாமணி அம்மையார்
நமது நாட்டின் விடுதலைக்கானப் போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பங்களிப்பு மகத்தானது. அகிம்சை வழியில் காந்தியடிகள் ஒருபுறம் போராடினாலும் இன்னொரு புறம் நேதாஜி ஆயுத வழிப் போராட்டத்தை முன்னெடுத்தார். அவரது படையில் பெண்கள் பிரிவு மிக உக்கிரமாக பிரிட்டிஷ் அரசை எதிர்த்துக் களம் கண்டார்கள். அதற்கு ஜான்சி ராணி படை எனப் பெயரிட்டப்பட்டிருந்தது.

1927- ம் ஆண்டு ரங்கூனில் பிறந்தவர் ராஜாமணி. இவரது தந்தை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். சுதந்திர போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்த அவருக்கு பிரிட்டிஷ் அரசு பல விதங்களில் அச்சுறுத்தலைத் தந்தது. அதனால், அவர் பர்மா தப்பி சென்று, தன் வாழ்வை அங்கேயே அமைத்துக்கொண்டார். அங்குதான் ராஜாமணி பிறந்தார். தன் மகளை ஆண் பிள்ளையைப் போல வளர்க்க ஆசைப்பட்டார் அதற்காகவே பெயரையும் ராஜாமணி என்று வைத்தார். ராஜாமணி பிறந்து பத்தாண்டுகள் கழித்து காந்தியடிகளைச் சந்திக்க, குடும்பத்துடன் சென்றனர். அப்போது அவரிடம், 'இந்தியர்களைத் துன்புறுத்தும் வெள்ளைக்காரர்களைக் கொல்ல வேண்டும்' என்று சொல்லியிருக்கிறார். காந்தி சிரித்துக்கொண்டே, 'நமது போராட்டம் அகிம்சை வழியிலான போராட்டம் குட்டிப் பெண்ணே' எனக் கூறினாராம்.
ராஜாமணி வளர்ந்ததும் நேதாஜி பற்றிய செய்திகளை ஆர்வத்துடன் கேட்டறிகிறார். அவரது கொள்கைகள் ராஜாமணியை மிகவும் ஈர்த்தது. நேதாஜி தன் ராணுவத்திற்கான நிதி திரட்டியபோது, தன் வைர நகைகளை கொடையாக கொடுத்தார். தவறுதலாக கொடுத்திருக்கக் கூடும் என ராஜாமணியைத் தேடி வந்து, திரும்பக் கொடுக்க வந்தபோதும், திரும்ப பெற மறுத்துவிட்டார்.
சரஸ்வதி ராஜாமணி
அடுத்த சில ஆண்டுகளில் ராஜாமணியும் அவரது தோழிகளும் நேதாஜியின் ஜான்சி ராணி படையில் சேர்ந்தனர். ராஜாமணிக்கு உளவுப் பிரிவில் சேர்க்கப்பட்டதால், நேதாஜி இவருக்கு சரஸ்வதி எனப் பெயர் மாற்றம் செய்தார். பிரிட்டிஷ் ராணுவத்திற்குள் புகுந்து, ரகசியங்களைச் சேகரிக்கும் பணியில் தன் உயிரைப் பணயம் வைத்து செய்தார். இதற்காக, யாரும் கண்டுபிடித்து விடாமலிருக்க ஆண் வேடத்தில் செல்வார். 1942-ல் தொடங்கி நான்கு ஆண்டுகள் உளவுப் பிரிவில் வேலைப் பார்த்தனர், அப்போது ஒருமுறை, ராஜாமணியின் தோழி, பிரிட்டிஷ் அரசிடம் மாட்டிக்கொண்போது, இவர் நடன மங்கை வேடமணிந்து, காவலர்களை ஏமாற்றி தோழியைக் காப்பாற்றினார். அப்போது தப்பித்து ஓடுகையில் காவலர்கள் சுட்ட குண்டுகள் ராஜாமணியின் காலைப் பதம் பார்த்தன. அடிப்பட்ட காலோடு மரத்தில் ஏறி, மறைந்திருந்து தப்பித்தார். அதன்பிறகு ராஜாமணியால் சரியாக நடக்க முடியாமல் போய்விட்டது. நடக்க முடியாத வேதனையை விட, இந்திய விடுதலைப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட முடியவில்லையே அவரை அதிகம் பாதித்தது.
பர்மா அரசு, ராஜாமணியின் தந்தை கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்துகளைப் பறித்துக்கொண்டு, இவரை இந்தியாவுக்கு அனுப்பி விட்டது. இந்தத் தகவல் நேதாஜிக்குத் தெரியவந்ததும், அவர், ராஜாமணியை சென்னைக்கு அனுப்பி வைத்தார். சென்னை அவருக்கு ஏழ்மை வாழ்க்கையை அளித்தது. ஆனாலும் தன் செயல்பாடுகளை ஒருநாளும் குறைத்துக்கொண்டதில்லை. மற்றவர்களின் துன்பத்தை தன் துயரமாக கருதுவார். தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சுனாமியின்போது, அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தனக்கு வழங்கப்படும் தியாகி பென்ஷனின் ஒரு மாத தொகையை அளித்தார்.
கண்டுகொள்ளப்படாத தியாகம். . தியாகி ராஜாமணி சரஸ்வதி.
தனது 16 வயதில் தனது நகைகளை INA விற்கு வழங்கி. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். .படையில் மணி எனும் பெயரில் ஆண் உளவாளியாக பணியாற்றி பல இன்னல்களை சந்தித்து சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்டு கடைசி வரை கொள்கையோடு வாழ்ந்தார். .
இவரை பற்றி,
பர்மாவில் வசித்த பெரும் செல்வந்தரின் தமிழ்மகள் சரஸ்வதி ராஜமணி. தன் 16 வயதில் நேதாஜியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு தன்னிடமிருந்த தங்கத்தையும், வைரத்தையும் நிதியாக நேதாஜி கட்டமைத்த இந்திய தேசிய ராணுவத்திற்கு கொடுக்கிறார்.
இதை கேள்விப்பட்ட நேதாஜி அந்த நகைகளுடன் அவர் வீட்டிற்கு வந்து தந்தையிடம் விவரம் தெரியாத இளம் பெண் ஆர்வத்தில் நகையை கொடுத்துள்ளார்,
இதை திரும்ப வாங்கி கொள்ளுங்கள்” என்று கொடுக்கிறார். இல்லை அது என் நகை, திரும்ப வாங்க முடியாது ராஜமணி பதில் அளிக்கிறார்.
அவரது ஆர்வத்தை கண்ட நேதாஜி அவரை ஐ.என்.ஏ(INA)வின் உளவு பிரிவில் இணைத்து கொள்கிறார்.
இளம் வயதில் உளவாளியாகிறார். மணி என்ற பெயரில் ஆணாக உளவு பார்த்து ஒருமுறை ஆங்கிலேயர்களிடம் சிக்கி காலில் துப்பாக்கி தோட்டாவுடன் தப்பிக்கிறார்.
சுதந்திரத்திற்கு பின்னும் நேதாஜி மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு போராடியவர்.. டெல்லியில் அது சமந்தமான பேரணி என்றால் உற்சாகமாக கிளம்பி வருவார்..
உடலில் முன்பிருந்த வலு இல்லை என்றாலும். குடும்ப உறவுகள் அதிகம் இல்லை என்றாலும், மக்களால் பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை என்றாலும் பொது போராட்டத்தில் எதையும் எதிர்பார்க்காமல் இறங்குவார்..
அரசாங்கத்தின் பென்சனில் வாழ்ந்தார்.. சென்னையில் சுனாமி வந்த போது சேர்த்து வைத்த பென்சன் தொகையை நிவாரணத்திற்கு கொடுத்துள்ளார்.
காலை முதல் மாலை வரை போராட்டத்தில் நிற்பார் கிடைக்கும் உணவை உண்ணுவார்..
அவரை சந்திக்கும் அனைவரையும் நினைவில் வைப்பார்..கையெழுத்து கேட்பவர்களுக்கு தமிழில் கவியெழுதி கையெழுத்திடுவார்
நேதாஜி பற்றியும் அவர்களது விடுதலை போராட்டம் பற்றியும் உணர்ச்சிவசப்பட்டு பேசும்போது எல்லாம் அழுவார்.. ஆம் ஒரு உண்மையான போராளிக்கு அது தானே செல்வம்,
இந்தியாவில் வீசும் சுதந்திரக் காற்றில் சரஸ்வதி ராஜாமணியின் வியர்வையும் கலந்திருக்கிறது என்பதை மறக்க வேண்டா..
ஆனால் இவரின் இறப்பிற்கு 10 பேர் அளவிலே கூட்டம் வந்தது, இதுவே சினிமா பிரபலம் என்றால்..? ஏனென்றால் அவர்கள் தானே கஷ்டப்பட்டு நம்மை உற்சாகபடுத்துகிறார்கள்..
ஒவ்வொரு இந்தியனுக்கும் உரைக்க வேண்டிய விஷயம்
நேதாஜியின் படையில் சரஸ்வதி ராஜாமணியைப் போல பெண்கள் இருந்ததே அவருக்கு கூடுதல் பலமாக இருந்திருக்கும்.
கொடுமை என்னவென்றால், அவரின் இறுதி சடங்கின் போது வந்தது பத்திற்கும் குறைவானவர்களே. …
நேதாஜியின் படையில் பெண்களின் இந்தியாவில் வீசும் சுதந்திரக் காற்றில் சரஸ்வதி ராஜாமணியின் வியர்வையும் கலந்திருக்கிறது.

No comments:

Post a Comment