Saturday, July 7, 2018

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கடசியின் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட பொது செயலாளர் ரெட் காசி,கண்டங்கள் கடந்து வியக்கும் தலைவராக பசும்பொன்முத்துராமலிங்கதேவர்

கண்டங்கள் கடந்து வியக்கும் தலைவராக
பசும்பொன்முத்துராமலிங்கதேவர்
உசிலம்பட்டி மண்ணில் நம் சொந்தங்கள் மீது பாயும் வழக்குகளில் ஓடோடி சென்று உதவிடும் மனம் படைத்த பண்பாளர்
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கடசியின் வழக்கறிஞர் பிரிவு 
மாவட்ட பொது செயலாளர் ரெட் காசி
கடவுள்களுக்கு எடுக்கப்படும் விழாக்களை போல அனைத்து மக்களாலும் கடவுளாக வழங்கப்பெறும் தேசிய தலைவர் பசும்பொன் தேவர் திரு மகனாருக்கு எடுக்கப்படும் விழா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது .
அக்டொபர் 28 ஆன்மிக விழாவாகவும் அக்டொபர் 29 அரசியல் விழாவாகவும் அக்டொபர் 30 அரசு விழாவாகவும் நடைபெறும் இந்த விழாவில் 2008 -ஆம் ஆண்டு வரை 29 ம் தேதி நடைபெறும் நிகழ்வுகளை
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கடசி முன் நின்று நடத்தியது .கலை நிகழ்வுகளை பின்னாளில் மாறி அனைத்து மக்களும் தெய்வமாக வணங்கிடும் விழாவில் மேல்மருவத்தூரில் இருந்து பிடி மண் எடுத்து வந்து கோவில் அமைத்துள்ளனர் .
இதனால் முளைப்பாரி ,பால்குடம் போன்றவை நடைபெறுகிறது .இந்நாளில் இன்றளவும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கடசியின் தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது .
தேவர் பெருமகனார் ஜெயந்தி விழா 110 வது ஆண்டும் ,குருபூஜை 55 வது ஆண்டும் ஒருங்கே அமைவது இந்த ஆண்டின் சிறப்பாகும் .கண்டங்கள் கடந்து வியக்கும் தலைவராக பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திகழ்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாக அந்தமான் தீவில் திருமகனார் அவர்களின் திருவுருவ சிலை
மாநில பொது செயலாளர் பி .வி. கதிரவன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது .
கல்கத்தாவில் தேவர் திருமகனாருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது .மும்பையில் மார்பளவு சிலை வைக்கப்பட்டது .டெல்லி ஜந்தர் மந்தர்பகுதியிலும் தேவர் பவன் அலுவகத்தில் தேவர் திருமகனாருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது .மூணாறு பகுதியில் வைக்கப்பட்ட சிலை சிறிய வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தால் சேதமடைய உடனடியாக தேசிய செயலாளர் தேவராஜன் ,மாநில பொது செயலாளர் பி .வி. கதிரவன் ஆகியோர் பெரு முயற்சி மேற்கொண்டு தேனி மாவட்ட பொறுப்பாளர் இணைந்து போராட்டம் களம் கண்டு தேவர் திருமகனாரின் சிலை அரசு செலவில் சரி செய்து தரப்பட்டது .
குறிப்பாக அகில இந்திய பார்வார்ட் பிளாக் கடசியின் உறுப்பினர் அட்டையில் நேதாஜி அவர்களின் படம் மட்டுமே இடம் பெற்று இருந்தது .இந்த நிலையே மாற்றி மத்திய குழு கூட்டத்தில் வலியுறுத்தி மாநில பொது செயலாளர் பி .வி. கதிரவன் 2011 -ம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் வழங்கப்படும் உறுப்பினர் அட்டைகளில் நேதாஜி அவர்களின் படத்தோடு தேவர் திருமகனாரின் படத்தையும் இணைத்து இடம் பெற செய்தார் .
தேசிய தலைவரின் ஜெயந்தி விழாவிற்கு 144 தடை உத்தரவு போட்டு விழாவை சிறுமைப்படுத்திடலாம் என நினைத்தவர்கள் மிரண்டு போகிற அளவிற்கு 144 தடை உத்தரவிற்கு பிறகும் மக்கள் அலைகடலென திரண்டு பசும்பொன் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர் .குறிப்பாக தேசிய அளவில் முக்கியத்துவம் ஏற்பட்டுள்ள இந்த விழாவை மத்திய அரசும் உன்னிப்பாக கவனித்து வருகிறது .தொடர்ந்து தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக குரல் எழுப்பி வருவதோடு அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட ரீதியான தீர்வு கண்டு வருகிறேன் என்றார் .
கள்ளர்முரசு சுரேஷ்

No comments:

Post a Comment