Saturday, July 7, 2018

கருவை மாற்றிய மண்ணின் காவல் தெய்வங்கள் தான் எங்கள் மண்ணின் நீதிபதிகள் .

கருவை மாற்றிய மண்ணின் காவல் தெய்வங்கள் தான் எங்கள் மண்ணின் நீதிபதிகள் .
அய்யன் பிடிக்கி பெரிய ஆங்கண் (எ) ரமேஷ்
கருவறையில் உள்ள அய்யன் சாமிக்குரிய கோடாங்கி அய்யன் பிடிக்கிஎன அழைக்கப்படுகின்றார் .அவர்தான்கோடாங்கி கருமாத்தூர் ஆங்கண் அய்யன் கோவிலின் அய்யன் பிடிக்கி பெரிய ஆங்கண் (எ) ரமேஷ்
நம்மிடம் காராள வெள்ளாளர் என்ற பெரும் நிலா உடைமையாளரின் கீழ் நாயக்கர்கள் ஐந்து கட்டி வாழ்ந்து வந்தனர் நில உடைமையாளாரிடம் பணியாளராய் இருந்த விண்ணுலாத்தேவன் ,திடியன் துங்காத்தேவன் மக்களை மதியாத காராள வெள்ளாளனின் மகள் இருக்கும் இடத்திற்கு சேவல் உருவத்தில் சென்று வருகிறார் கருப்பசாமி .
அதனால் அவள் மணமாகாமலேயே மாதமாய் இருப்பது போல் தோற்றம் பெற தன்மகள் மீது சந்தேகம் அவளை கொல்ல தந்தையே துணிந்து அவள் வயிற்றை கிழித்து பார்த்த போது மண் மட்டுமே இருந்தது .இவ்வாறு கருவை மாற்றிய பெண் ஆதாலால் கருமாத்தூர் என்று அழைக்கப்படுவதாகவும் ,அந்த மண்ணில் கருப்பசாமிதான் எங்களுக்கு உயர் நீதிமன்றம் , உசச நீதிமன்றம் நீதிபதிகள் என்றார் அய்யன் பிடிக்கி பெரிய ஆங்கண் (எ) ரமேஷ்
கள்ளர்முரசு சுரேஷ்

No comments:

Post a Comment