Saturday, July 7, 2018

காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்

காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்
அமைதியாக கடமையில் ஈடுபடுங்கள். எதற்காகவும் கோபம் கொள்ளத் தேவையில்லை. உலகில் எல்லாம் நன்மைக்காகவே நடக்கிறது.
*
மற்றவர் குறைகளை அன்பால் திருத்த முயலுங்கள். அடக்குமுறையால் நிலையான பயன் உண்டாவதில்லை. 
*
நல்லவன் ஒருவன் இருந்தால் அவன் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் ஊரார் அனைவருக்கும் நன்மை உண்டாகும்.
*
வாழ்வில் குறுக்கிடும் கஷ்டத்தை எண்ணிக் கலங்க வேண்டாம். சகிப்புத் தன்மையுடன் பொறுத்துக் கொள்ளுங்கள்.
*
தேவையை அதிகரித்துக் கொண்டே போகாமல், முடிந்த அளவிற்கு எளிமையுடன் இருக்கப் பழகுங்கள்.
தெய்வத்தை தாயாக கருதுவதே அம்பிகை வழிபாடு. அவளிடம் உயிர்கள் எல்லாம் நலமுடன் வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்யுங்கள்.
*
நடந்ததை நடந்தபடி சொல்வது சத்தியமாகாது.
*
பெண்கள் சமையலுக்காக வீட்டில் அரிசி எடுக்கும் போது, ஒரு கைப்பிடியை ஏழைகளுக்கு தர்மம் செய்ய எடுத்து வைக்க வேண்டும்.
*
கோபம் என்பது மனிதனின் மனம் என்னும் விளக்கை அணைத்து இருளில் தள்ளி விடும்.
* பள்ளியில் சேர்க்கும் முன் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தருவது பெற்றோரின் கடமை.
*
நல்லவர்களிடம் அன்பு காட்டுவது சிறப்பானது. பாவிகளின் மீது அன்பு செலுத்துவது அதை விட சிறப்பானது.
*
அன்பினால் பிறருடைய குற்றத்தை திருத்தும் போது மட்டுமே நிலையான பலன் கிடைக்கும்.
*
தேவைகள் அதிகரித்துக் கொண்டே சென்றால் அதற்கேற்ப வாழ்வில் பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
மனமே கடவுளின் இருப்பிடம். அதை தூய்மையாக வைத்திருப்பது கடமை.
*
பிறர் நம்மை துன்பப்படுத்தும் போது அதைப் பொறுப்பது மனிதத்தன்மை. மறந்து விடுவது தெய்வத்தன்மை.
*
நல்ல சக்தியும், புத்தியும் கடவுள் நமக்கு அளித்திருக்கிறார். அதன் மூலம் நாம் நற்செயல்களில் மட்டுமே ஈடுபட வேண்டும்.
*
வாழ்வில் ஒழுக்கமும், நேர்மையும் இருந்து விட்டால் செய்யும் செயல் அனைத்திலும் அழகும், கலையுணர்வும் வந்து விடும்.
காஞ்சிப்பெரியவர்

No comments:

Post a Comment