Saturday, July 7, 2018

தேவர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கும் பூசாரி பெருமாயி முக்குலத்து சமுதாய தலைவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்களா ??? கடலை விற்ற காசில் 22 ஆண்டுகளாக தேவர் சிலையே சுத்தம் செய்து மண்பானையில் பொங்கல் வைத்து ,தேவர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கும் பூசாரி பெருமாயி

முக்குலத்து சமுதாய தலைவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்களா ???
கடலை விற்ற காசில் 22 ஆண்டுகளாக தேவர் சிலையே சுத்தம் செய்து மண்பானையில் பொங்கல் வைத்து ,தேவர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கும் பூசாரி பெருமாயி
ஒவ்வொரு தேவர் ஜெயந்தியின் போதும் கோரிப்பாளையம் வைகை வடகரையில் தேவர் திருமகனாரை தரிசிக்க வரும் பக்தகோடிகள் தேவரை காணுகிற நேரத்தில் நெற்றி நிரம்ப திருநீரோடு வருகிற அனைத்து அரசியல் தலைவருக்கெல்லாம் திலகமிடும் எல்லாரும் பூசாரி பெருமாயி பாட்டியே பார்த்திருப்போம் .தேவர் சிலையே சுற்றி ஒவ்வொரு நாளும் சுத்தம் செய்து ,தண்ணீர் தெளித்து விளக்கேற்றி வைத்து மாலையிடும் பணியே தன்னார்வமாக மேற்கொண்டு வரும் பெருமாயி கள்ளர் முரசு மாத இதழ் சார்பாக சந்தித்தோம் .
தேவர் திருமகனார் தமக்கு காடசி தந்த தத்ரூப நிகழ்ச்சியே நம்மிடம் குறிப்பிடட அவர் 22 வருடங்களாக இந்த பணியே தாம் மேற்கொண்டு வருவதாகவும் ,தேவர் குருபூசை நடைபெறுகிற நாளில் 48 நாட்கள் தொடர்ந்து கடலை விற்று கிடைக்கின்ற காசில் பொங்கல் வைத்து வழிபட்டு வருவதாக கூறினார் .
வறுமையால் கஷ்டப்படும் இந்த பெருமாயி பாட்டிக்கு முக்குலத்து சமுதாய தலைவர்களோ ,தேவரின் ஆர்வாளர்களோ சம்பளம் கொடுத்திட முன் வந்தால் கடலை வியாபாரத்தை விட்டு காலம் முழுவதும் தேவர் சிலை அருகிலே அமர்ந்து பணிவிடைகளை ,பூசைகளும் செய்ய தயாராக
இருப்பதாக கூறினார் உத்தம தலைவரின் ,உத்தம தலைவனின் சிலையே பாதுகாக்கிற உணர்வுபூர்வமான இந்த எளியவருக்கு உதவிக்கரம் நீட்டிட யாராவது முன் வருவார்களா ???
இவருக்கு உதவ முன் வருபவர்கள் (9942825058 ,96776 -72189 ) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்
சமுதாய பணியில் கள்ளர் முரசு மாத இதழ்

No comments:

Post a Comment