Saturday, July 7, 2018

தென் இந்திய பார்வார்ட் பிளாக்கின் நிறுவனத்தலைவர் கே .சி .திருமாறன்ஜிதேசிய தலைவரின் ஜெயந்தி விழாவிற்கு 144 தடை உத்தரவு அவமானம் .

தேசிய தலைவரின் ஜெயந்தி விழாவிற்கு 144 தடை உத்தரவு அவமானம் .
தென் இந்திய பார்வார்ட் பிளாக்கின் நிறுவனத்தலைவர்
கே .சி .திருமாறன்ஜி
தென் இந்திய பார்வார்ட் பிளாக்கின் நிறுவனத்தலைவர் ,இளைஞர் பட்டாளத்தை இராணுவக் கட்டுப்பாட்டோடு வைத்திருக்கும் கே.சி.திருமாறன் அவர்களை கள்ளர்முரசு மாத இதழுக்காக சந்தித்த போது
தேசிய தலைவரின் ஜெயந்தி விழாவில் 144 தடை உத்தரவு விதிக்கப்படுவது அவமானமாக கருதுகிறேன் .உடனடியாக நீதிமன்றத்தை அணுகி இந்த தடை திரும்ப பெறப்படவேண்டும் .''தேவர் திருமகனார் ஒரு ஆன்மிக சித்தர் .அவரது விழாவிற்கு செல்கிறவர்கள் குலசாமி கோவிலுக்கு செல்வதுபோல தான் விரதம் இருந்து பயபக்தியோடு செல்கிறார்கள் .ஆகையால் அந்த தேசிய தலைவனை சாதித்தலைவனாக மட்டும் சித்தரிப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது .
தேர்தலுக்காக தேவர் இனமக்கள் பயன்படுத்தி கொள்ளும் திராவிட கட்சிகள் இதனை கருத்தில் கொள்வதுயில்லை .இரண்டரை கோடிமக்களின் ஈடு இணையற்ற தலைவராக நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் அவர்கள் ,இந்திய தேசிய இராணுவம் அமைத்தபோது
தென்னகத்தின் இருந்து அவர்கண்ட இயக்கத்தை வழி நடத்திய பசும்பொன்முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் வரலாற்றை படிக்கும் விதமாக 144 தடை உத்தரவு நீக்கப்படவேண்டும் .அவரின் வாழ்க்கை வரலாற்றை சிறப்பிக்கின்ற வகையில் கள்ளர்முரசு மாத இதழ் வெளியிடும் சிறப்பிதழுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் .
2001 ஆம் ஆண்டு தேவர் தேசிய மன்றமாக தொடங்கப்பட்ட எங்களது இயக்கம் 2006 ஆம் ஆண்டு தேவர் தேசிய பேரவையாக மாற்றம் பெற்றது .2016 ம் ஆண்டு ஜூலை 13 -ம் நாள் தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியாக புது வடிவமாக பெற்ற இயக்கத்தை இராமநாதபுரம் ராஜகுமாரன் சேதுபதி -லட்சுமி நாச்சியார் ,பீகார் மாநிலங்களை உறுப்பினராக உள்ள பா.ஜ.க மாநில செயலாளர் இல.கணேசன் தொடக்க விழாவில் பங்கேற்றார் .அறிவு சார் மாணவர்கள் ,வறுமையில்லா தமிழகம்,
விவசாயிகளின் துயர் துடைப்பது ,சமசீரான சலுகை என கொள்கைகளை நோக்கி இந்த இயக்கம் செயல்படுகிறது .
1974 ம் ஆண்டு கே .சொக்கர் தேவர் -சரோஜா அம்மாளுக்கு 4 வது மகனாக மதுரை கிராஸ் ரோடு அரசு மருத்துவமனையில் 12.03.1974 ல் பிறந்தேன் .பள்ளி பருவத்தை ஆர் .சி .பள்ளியிலும் ,இராண்டாம் நிலை பருவத்தை சம்மட்டிபுரத்திலும் படித்தேன் .அதன்பின் மருந்தாக்கவியலில் நாட்டம் கொண்டு மதுரை அல்டரா மருந்தாக்கவியல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தேன் .குடும்பத் தொழிலான ரியல் எஸ்ட்டேட் பணியில் தந்தையோடு இணைந்து செயல்பட்டேன் .
1996 ல் ஏபிவிபி மாணவர் அமைப்பு பணிகளில் ஈடுபட்டேன் .அரசரடி ஹார்லி நகர் பகுதியில் இந்து முன்னணி அலுவலக பணி 1999 -2000 வரை விஷ்வ பரிஷித் அமைப்பில் பணியாற்றி 2000 -ல் பா.ஜ.காவோடு இணைந்தேன் .இன்றுவரை ஆர் .எஸ் .எஸ் -ன் தொடர்பில் இருக்கிறேன் .
2001 - ல் வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தேன் .2006 தேர்தலில் சட்ட மன்ற தேர்தலில் வேட்பாளராக நின்றேன் .பசும்பொன் தேவர் திருமகனாரை கொசைப்படுத்துகிற வகையில் பேசிய கொளத்தூர் மணியே மதுரைக்குள் நுழையமுடியாதபடி போராட்டக்களம் கண்டோம்
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரினை சூட்ட கோரி தொடந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறோம் . மதுரையில் உள்ள மீனாட்ச்சி அம்மன் கோவிலில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் எவ்வாறு வணங்கி பாதுகாத்து அரணாக விளங்கினாரோ அதுபோல் இன்று மதுரை அன்னை மீனாட்சி மண்ணில் தென் இந்திய பார்வர்ட் பிளாக் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறோம் .
.தலித் இன மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்ததோடு ,சமூக விடுதலை , தலித் இனவிடுதலைக்காக தமது வாழ்வை அர்ப்பணித்த மாபெரும் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் என்றால் அது மிகையாகாது .
கள்ளர்முரசு சுரேஷ்

No comments:

Post a Comment