Saturday, July 7, 2018

நேதாஜி சுபாஷ் சேனை ''சட்டத்தை மீற மாட்டோம் , சாவுக்கு அஞ்ச மாட்டோம்'' நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பாளர் வழக்கறிஞர் DR.V.மகாராஜன் .

நேதாஜி சுபாஷ் சேனை
''சட்டத்தை மீற மாட்டோம் ,
சாவுக்கு அஞ்ச மாட்டோம்''
நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பாளர்
வழக்கறிஞர் DR.V.மகாராஜன் .
சமுதாய மக்களுக்கு வழக்குகள் தொடர்பான உதவிகள் தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரினை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட கோரி போராட்டம் ,பொது பிரச்சனைகளுக்கு நாள்தோறும் போராட்ட களம் என தொடர்ந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டுவரும் வழக்கறிஞர் DR.V.மகாராஜன் அவர்களை கள்ளர் முரசு மாத இதழின் பேட்டிக்காக அவரது இல்லத்தில் சந்தித்தோம் .
நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு எப்போது தொடங்கப்பட்டது ?
2015 -ம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாளில் முன்னதாக பணியாற்றி வரும் சூழலில் சமுதாய ரீதியிலான வழக்குகளில் ஆஜராகி சமுதாய மக்களுக்காக பணியாற்றி வந்தேன் .அப்போது பல்வேறு வழக்குகளில் நமது சமூக மக்களுக்கு சட்ட உதவிகள் செய்தேன்.பின்னர் தேவர் பேரவை முக நூலில் குழுக்களின் மூலமாக கீழக்குயில்குடி ரகுபதி ,தங்க விருமன்,சரண்ராஜ் ,ஈஸ்வரன் ,முத்தையா உள்ளிட்ட தோழர்கள் இணைந்து பணியாற்றி வந்தோம் .முக்குலத்தோர் போராட்ட குழு வாட்ஸ் அப் குரூப் அமைத்து அதன் பிறகு தன் எழுசியோடு கூடிய விஸ்பரூபம் தான் நேதாகி சுபாஷ் சேனை என அமைப்புக்கு பெயரிடலாம் என ஆலோசிக்கையில் நேதாகி சுபாஷ் சேனை அமைப்பு என சாத்தனுர் தன்ராஜ் அவர்களின் கூற்றின் படி வைக்கப்பட்டது .
ஆரம்பித்து பத்து நாட்களுக்குள் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க தற்போது 28 மாவட்டங்கள் ,7 மாநிலங்கள் ,8 வெளிநாடுகளில் அமைப்பு செயல்பட்டு வருகிறது .பொருளாளர் கிடையாது .தலைமையே உறுப்பினர்களுக்கான செலவிடுகிறது .இதன் பெயரை சொல்லி யாரும் வசூலில் ஈடுபட கூடாது என்பது எங்களின்குறிக்கோளாக உள்ளது .பி.சி.ஆர் சட்டம் தொடர்ந்து தவறாக பயன்பத்தப்படுவதற்கு எதிராக போராடி வருகிறோம் .
இது முழுக்க முழுக்க சாதிய அமைப்பு கிடையாது .முக்குலத்து சமுதாயத்திற்கு முன்னுரிமை தாரக கூடிய அமைப்பாகும் .அதனால் தான் சட்ட விதி முறைகளை மீறி கட்டப்பட்ட சரவணா செல்வரத்தினம் நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினோம் .கலாசார சீரழிவை ஏற்படுத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக போராடினோம் .ஆட்டொ தொழிலார்களுக்கு ஆதரவான போராட்டத்தை மேற்கொண்டோம் "சட்டத்தை மீற மாட்டோம் சாவுக்கு அஞ்ச மாட்டோம் " என்ற கொள்கை நோக்கோடு சட்ட விழிப்புணர்வு மூலமாக மக்களுக்கு காவல் துறை ,சட்டத்தின் மேலுள்ள ஸத்தை போக்குகிறோம் .
தேவர் ஜெயந்தி விழாக்கள் பற்றி ?
சமுதாய அமைப்புகள் தங்களை உயர்த்தி காண்பிப்பதற்காக இது போன்ற விழாக்களை பயன்படுத்தி கொள்கிறார்களே தவிர ,தேவர் மீதான பற்றினால் என்று கூற இயலாது .தேவர் ஜெயந்தி நாட்களை தவிர்த்து மற்ற எத்தனை நாட்கள் இவர்கள் பசும்பொன் சென்று வந்தார்கள் .தேவர் ஐயாவின் சொல்படி நடக்கிறார்களா ? இதனால் சாதி சார்ந்த விழாவாக மடடும் தேவர் ஜெயந்தி விழா இருக்கிறது .
உங்களை பற்றி லட்சியம் (அ) இலக்கு ?
ஒரே ஒரு லட்சியம் தான் முக்குலத்தோர் பிற்படுத்தப்பட்ட மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துகிற அத்தனை அமைப்புகள் ,கட்ச்சிகளை ஒழித்து ஒரே அமைப்பு என்ற நிலைக்கு வந்தால் தான் அரசியல் அங்கீகாரம் பெற முடியும் என்றார் வழக்கறிஞர் DR.V.மகாராஜன் .
கள்ளர்முரசு சுரேஷ்

No comments:

Post a Comment